அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 July 2017 3:15 AM IST (Updated: 2 July 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

கடலூர்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர்மாணிக்கத்தைச்சேர்ந்த கருணாநிதி என்பவருடைய மகன் பிரகாஷ்(வயது 29). சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் டிரைவர் வேலை வாங்கித்தருவதாக கூறி இவரிடம், சிதம்பரத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் 5 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வாங்கியிருந்தாராம். ஆனால் அவர் பிரகாசுக்கு வேலை வாங்கி தரவில்லையாம். இதனால் பணத்தை திருப்பித்தருமாறு பிரகாஷ் கேட்டதற்கு அவரை ராஜா திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கனகசபை, கார்த்திகேயன் ஆகியோர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story