போலி குளிர்பான ஆலைக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் குரங்குச்சாவடியில் இயங்கிய போலி குளிர்பான ஆலைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குரங்குச்சாவடி வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே உள்ள கட்டிடம் ஒன்றில் போலி குளிர்பான ஆலை இயங்கி வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீசுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் செல்வகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சங்கர் மற்றும் 6 பணியாளர்கள் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு சென்றனர்.
அவர்களை கண்டதும் ஆலையில் இருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். ஆலையை சோதனை செய்தபோது தரமற்ற பாட்டில்களில் குளிர்பானங்கள் அடைத்து வைத்தும், மேலும் சுகாதாரமற்ற முறையில் பாட்டில்கள் போடப்பட்டும் கிடந்தன. ஆலையின் பின்புறம் திறந்த வெளியில் கிடந்த பாட்டில்களில் மழைநீர் நிரம்பி கொசு உற்பத்தி கேந்திரமாக இருந்தது. மேலும் ஆலை அருகே பள்ளி ஒன்றும் இயங்கி வருவதால், மழைநீர் தேங்கிய பாட்டில்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து அந்த போலி குளிர்பான ஆலையில் இருந்த குளிர்பான பாட்டில்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆலையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதுகுறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெயர் பலகை எதுவும் இன்றி, போலி குளிர்பான ஆலை இயங்கி வந்துள்ளது. நாங்கள் ஆய்வுக்காக ஆலைக்குள் புகுந்ததும் அதன் உரிமையாளர் உள்பட அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டனர். அதனால், யாருடைய பெயரில் ஆலை இயங்கி வருகிறது என தெரியவில்லை. இருப்பினும் குளிர்பான பாட்டில் களில் உள்ள பானம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. அங்கிருந்த குளிர்பான பாட்டில்களில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பெயர்களில் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும் அங்கு காலாவதியான குளிர்பான பாட்டில்களும் இருந்தன. அவை சேலம் மாநகரில் உள்ள மதுக்கடை பார்களில் சப்ளை செய்ய பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர் நடவடிக்கைக்காக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் களிடம் பரிந்துரை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலி குளிர்பான ஆலையை ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர்தான் நடத்தி வந்ததாகவும், ஆலை சோதனை செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்றும், ஆலை நடத்தியவர் மீது தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்றும் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

Related Tags :
Next Story