மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 July 2017 4:00 AM IST (Updated: 2 July 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளின் 5.1.2017-ந் தேதியை வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், தர்மபுரி நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டுகளில் வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் அந்தந்த வாக்காளர்கள் பதிவு அலுவலரால் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

இந்த வாக்காளர் பட்டியல்களில் பாகம், வார்டு ஏதும் தவறுதலாக இடம் மாறியிருப்பின் உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புகள் விண்ணப்பத்தை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி ஆணையாளர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் பதிவுகளை ஆட்சேபிக்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளில் உள்ள காப்புரைகளின் கீழ் தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரூர்

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதையன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story