குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முசிறி,

முசிறி ஊராட்சி ஒன்றியம் செவந்தலிங்கபுரம் ஊராட்சியில் 6 மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் திருச்சி- சேலம் மெயின்சாலையில் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் நேற்று குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்தும், குடிநீர் வழங்க கோரியும் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யாதுரை, ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், ரத்தினம், வருவாய் ஆய்வாளர் முத்து, கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story