ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
எல்.ஐ.சி. பாலிசிதாரர்களின் பிரீமியம் மீதான மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (நாகர்கோவில் கிளை–2) சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளையின் தலைவர் கே.பி.எஸ்.பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மண்டல செயற்குழு உறுப்பினர் ராஜன், கோட்ட துணைத்தலைவர் ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் சந்திரன், மரிய ஜார்ஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்க பொருளாளர் பொன்னையா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சசிதரன், சிவா, ஆண்டனி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story