ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், திருப்பத்தூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், திருப்பத்தூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மாநில துணைத் தலைவர் ஆர்.தெய்வசிகாமணி தலைமையில், சங்க நிர்வாகிகள் டி.கே.இக்பால், ஏ.டி.ஜி.சித்தார்த்தன், டி.எஸ்.பார்த்தசாரதி, எஸ்.ரவிச்சந்திரன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பலசரக்கு, மளிகை வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story