அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டம் சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டம் சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டம் சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

அரக்கோணம்,

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு சார்பில், அம்மா ஆரோக்கிய திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜீவா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மொத்த விற்பனை கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ராஜா, முன்னாள் கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் பரிசோதகர் பார்த்திபன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, அம்மா ஆரோக்கிய திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story