கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

வேலூர்,
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கடன் விற்பனை நிலுவைகளை ஊழியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது, முகாம் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர்கள் குமார், பெருமாள், சுப்பிரமணியன், ஜெகதீசன், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story