தமிழக அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நகரில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவிலின் சொத்துக்கள் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சொத்துகளை மீட்க வேண்டும். மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களில் இருப்பது போன்று இந்து கோவில்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கலெக்டரிடம் நாளை (அதாவது இன்று) மனு கொடுக்க உள்ளோம்.
சமீபகாலமாக இந்து தலைவர்கள் மீது கொலைவெறி தாக்குதல், கொலை மிரட்டல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள் விவசாயிகளுக்காக போராடவில்லை. தொழிலாளர்களுக்காக போராடவில்லை. அவர்கள் இந்து மதம், மோடி எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகின்றனர்.
ரஜினி
தமிழ்நாடு அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது. இதனை ரஜினியால் தான் நிரப்ப முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் ரஜினியை அரசியலுக்கு அழைத்து வருவோம். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார். ரஜினி பற்றி சுப்பிரமணியசுவாமி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அதை விடுத்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால், ரஜினியிடமும், அவருடைய ரசிகர்களிடமும் கலந்து பேசி, சுப்பிரமணியசுவாமி மீது அவதூறு வழக்கு தொடருவோம்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
பேட்டியின்போது, மாநில துணைத்தலைவர் குணசீலன், தென்மண்டல அமைப்பாளர் சாஸ்தா, மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், மாவட்ட செயலாளர் வீரமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story