முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது
அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலையில் பேரவையின் உயர்மட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் தலைமையில், ஆர்.கே.அன்பு உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தென்குளக்கரை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட இருந்தனர்.
ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி இல்லை என தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன் உள்பட 100–க்கும் மேற்பட்டவரை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story