குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 July 2017 3:00 AM IST (Updated: 3 July 2017 8:49 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் 3 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆரணி,

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் 3 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று ஆரணி–தேவிகாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, தாசில்தார் ஆ.சுப்பிரமணி, ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

கிராமத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.


Next Story