டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்
பாப்பாங்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கரடிகுளம் கிராமத்தை அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வயல் வெளியில் அவசர அவசரமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த பாப்பாங்குளம் கிராமமக்கள் நில உரிமையாளரிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் தான் வீடு கட்டுவதாக கூறி உள்ளார். ஆனால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடையில் விற்பனைக்காக நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்களை கொண்டு வந்து டாஸ்மாக் கடையில் இறக்கி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு 2-வது நாளாக நேற்று தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எங்கள் பகுதிக்கு இந்த டாஸ்மாக் கடை வேண்டாம் என கோஷமிட்டனர்.
எங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். எனவே டாஸ்மாக் அதிகாரிகள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு எங்கள் ஊரை விட்டு வேறொரு இடத்தை தேர்வு செய்து அங்கு டாஸ்மாக் கடையை திறந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாமல் கடையை திறந்தால் பெண்களாகிய நாங்களே மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் நாளையும் (இன்றும்) போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
அதிகாரிகள் கடையை திறந்து விடுவார்கள் என்று பொதுமக்கள் 3 மணி நேரம் டாஸ்மாக் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகள் எவரும் வராததால் பொதுமக்கள் தாங்களாகவே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story