நாற்கர சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த கட்டிடங்கள் இடிப்பு


நாற்கர சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த கட்டிடங்கள் இடிப்பு
x
தினத்தந்தி 4 July 2017 4:30 AM IST (Updated: 4 July 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

வில்லுக்குறி அருகே நாற்கர சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

அழகியமண்டபம்,

நாற்கர சாலை திட்டத்திற்காக வில்லுக்குறி அருகே வடக்கு நுள்ளிவிளை, கொன்னக்குழி விளை போன்ற பகுதிகளில் நிலம் கையப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் காங்கிரீட், ஓட்டு வீடுகள், கடைகள் போன்ற கட்டிடங்கள் இருந்தன. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

தொடர்ந்து அந்த நிலத்தில் வசித்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் எடுத்து சென்றனர்.

இடிப்பு

இதையடுத்து, கையப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த கட்டிடங்களை இடித்து அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை வடக்கு நுள்ளிவிளை, கொன்னக்குழி விளை போன்ற பகுதிகளில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வீடு, கடை போன்ற கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இந்த பணி வில்லுக்குறி முதல் களியக்காவிளை வரை நடைபெறும் எனவும், முதற்கட்டமாக வில்லுக்குறி அருகே தொடங்கி உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story