இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டி மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுபா.முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புக்குழு தலைவர் பொன்னுசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் வசந்தகுமார், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், தினேஷ், சரஸ்வதி, ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்து ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் ஜூலை போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற தேர்தலின்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முதல் கையெழுத்தாக அதற்கான கையெழுத்து போடப்படும் என்றும் வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்றனர்.
ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு முதலில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். அதை ஜூலை போராட்டம் என பெயர் வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலம் முழுவதும் நடத்தினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனைக் கேட்டால், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் மனு கொடுத்ததாக சொன்னார். இப்போது மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார். அதுவரை தனது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை கல்வி உதவித்தொகையாக வழங்குவதாக கூறுகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிரந்தர சட்டம் கொண்டுவரவில்லை.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

Related Tags :
Next Story