தூத்துக்குடி–கோவை இடையே ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
தூத்துக்குடி–கோவை இடையே ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி–கோவை இடையே ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் பிரமநாயகம், நிர்வாக செயலாளர் அந்தோணி நேவிஸ் ஆனந்தன் ஆகியோர் தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் நீனுஇத்யேராவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
ரெயில் நேரத்தை மாற்ற...தூத்துக்குடி–கோவை ரெயிலை, அதிவிரைவு ரெயிலாக மாற்றம் செய்து இருப்பதால் பயண நேரம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் கோவையில் இருந்து இரவு 8–30–க்கு புறப்பட்ட ரெயில், தற்போது 7–30–க்கு புறப்படுகிறது. இதனால் அதிகாலை 3–55 மணிக்கு ரெயில் தூத்துக்குடியை வந்தடைகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இந்த ரெயில் கோவையில் இருந்து இரவு 8–30–க்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேருமாறு நேரத்தை மாற்ற வேண்டும்.
சிக்னல் வசதிதூத்துக்குடி ரெயில் நிலையம் ‘ஏ’ தரவரிசை பெற்றுள்ளது. இங்கு பயணிகள் டீ குடிப்பதற்கு கூட வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் தேநீர் விடுதி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள 3–வது பிளாட்பாரத்தில் சிக்னல் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்மீட்டர்கேஜ் பாதை இருந்த போது, தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அகல பாதை பணி நடந்த போது, அந்த ரெயில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு தினமும் மதுரை வழியாக புதிதாக ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம், தூத்துக்குடி–திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறி உள்ளனர்.