நெல்லை மாணவர் விடுதியில் பயங்கரம்: உல்லாசத்துக்கு மறுத்த பெண் வெட்டிக்கொலை
மாணவர் விடுதியில் உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
மாணவர் விடுதியில் உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
சமையல் வேலைநெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய மனைவி ஆனந்தி (வயது 38). இவர்களுக்கு சுஜிதரன், அச்சுதன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு ஆனந்தி தன்னுடைய 2 மகன்களுடன் வசித்துவந்தார்.
ஆனந்தியின் மூத்த மகன் சுஜிதரன் தற்போது பிளஸ்–2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்து இருந்தார். 2–வது மகன் அச்சுதன் தற்போது பிளஸ்–1 படித்து வருகிறார். பேட்டையில் உள்ள சிறுவர்கள் தங்கும் இல்லம் ஒன்றில் ஆனந்திக்கு சமையல் வேலை கிடைத்தது.
விடுதியில் தங்கினார்ஒரு டிரஸ்ட் சார்பில் செயல்பட்டுவரும் அந்த இல்லம் பள்ளிக்கூட மாணவர்களின் தங்கும் விடுதியாகவும் உள்ளது. வேலை கிடைத்ததால் ஆனந்தி குடும்பத்துடன் பேட்டையில் குடியேறினார். அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் தன்னுடைய மகன்களுடன் தங்கியிருந்து சமையல் வேலையும் செய்துவந்தார்.
வழக்கம்போல நேற்று காலை விடுதியில் உள்ள மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். ஆனந்தி மட்டும் விடுதியில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபருக்கும், ஆனந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெட்டிக்கொலைவாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த நபர் அரிவாளால் ஆனந்தியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
கள்ளக்காதலன் கைதுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆனந்தியின் கள்ளக்காதலன் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த செல்லப்பா (50) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:–
ஆனந்தியின் கணவர் சந்திரசேகரன் ஓலைப்பெட்டி செய்யும் தொழில் செய்ததால் பனை ஏறும் தொழிலாளியான என்னிடம் ஓலை வாங்குவார். அப்போது அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது எனக்கும், ஆனந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. சந்திரசேகரன் இறந்த பிறகும் ஆனந்தியின் வீட்டுக்கு சென்று உதவிகள் செய்வேன்.
உல்லாசத்துக்கு மறுப்புஅப்போது ஆனந்திக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் உல்லாசமாக இருப்போம். ஆனந்தி மாணவர் விடுதிக்கு சமையல் வேலைக்கு வந்துவிட்ட பிறகு என்னுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார். இதனால் ஆனந்திக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன்.
நேற்று காலை மாணவர்கள் பள்ளிக்கு சென்ற பின்னர் விடுதிக்குள் சென்றேன். அங்கு தனியாக இருந்த ஆனந்தியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அங்கு கிடந்த அரிவாளால் சரமாரியாக ஆனந்தியை வெட்டியதில் இறந்துபோனார்.
இவ்வாறு செல்லப்பா கூறியுள்ளார்.