மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் முத்தரசன் பேட்டி
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கீரமங்கலம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ள இந்தியாவை மீட்போம்.. தமிழகத்தை காப்போம் பொதுக்கூட்ட விளக்க தெருமுனை பிரசாரம் கீரமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கீரமங்கலம் நகர செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செங்கோடன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.இதில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கதிராமங்கலத்தில் பொதுமக்களை வீடு வரை சென்று தாக்கி உள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சட்டமன்ற மரபைமீறி மக்களை குறைக்கூறி பதில் சொல்லி இருப்பது நல்லதல்ல. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு வேண்டுமானால் ரத்து செய்யட்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது தவறானது.
நெடுவாசல் போராட்டம் இத்தனை நாள் நடக்க மத்திய அரசு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டது தான் காரணம். இந்த திட்டத்தை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடியை ரத்து செய்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை சொன்ன தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல். தமிழக அரசு அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் சாதாரண பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மோடியின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தியாவை மீட்போம்... தமிழகத்தை காப்போம்... பொதுக்கூட்ட விளக்க தெருமுனை பிரசாரம் அறந்தாங்கியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story