திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விரைவில் புதிய விமானசேவை


திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விரைவில் புதிய விமானசேவை
x
தினத்தந்தி 5 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு புதிய விமான சேவை விரைவில் தொடங்கப்படுகிறது.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு புதிய விமான சேவை தொடங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை “இண்டிகோ” விமான நிறுவனத்தின் சார்பில் தொடங்கப் படுகிறது. இதற்காக அந்த நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் முதல் கட்ட ஆய்வுக்கு திருச்சி வந்து விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், குடியுரிமை பயணிகளுக்கான வசதிகள், விமான ஓடுதள வசதி போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும், திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு நேரடி விமான சேவையினை ஏர்-ஏசியா நிறுவனத்துடன் இணைந்து தாய் ஏர்வேஸ் நிறுவனம் வழங்க உள்ளது.

கடந்த சில நாட்களாக கார்கோ ஏற்றுமதி பிரிவில் இருந்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புகளை சீர் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், திருச்சி விமான நிலையத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் 8 புதிய ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கார்கோ மற்றும் விமான நிலைய சோதனை பகுதிகளில் வைக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story