விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்


விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 July 2017 4:30 AM IST (Updated: 5 July 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், மன்னார்குடியில் வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில தலைவர் லாசர் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

100 நாள் வேலையை திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். வறட்சி நிவாரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் கையால் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, கட்சியின் நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் இடும்பையன், சங்க நிர்வாகிகள் மணியன், காளிமுத்து, ஜெயபால், பாலைய்யா, சந்திரகாசன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல மன்னார்குடியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரராஜா தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மாநில செயலாளர் அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, மணி உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.


Related Tags :
Next Story