பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வதாக ஸ்ரீரங்கப்பட்டணா ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. மீது வருவாய் துறை அதிகாரி புகார்
பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வதாக ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ. மீது வருவாய் துறை அதிகாரி புகார் கொடுத்துள்ளார்.
மண்டியா,
பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்வதாக ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ. மீது வருவாய் துறை அதிகாரி புகார் கொடுத்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வருவாய் துறை அதிகாரி புகார்மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கசபா கிராமத்தில் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தொட்டய்யா. இவர் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ் பண்டிசித்தேகவுடா மீது மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவிடம் புகார் கொடுத்தார்.
மேலும், கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, கவர்னர் வஜூபாய் வாலா, சபாநாயகர் கே.பி.கோலிவாட், கர்நாடக லோக் அயுக்தா ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
பணி செய்யவிடாமல் தொந்தரவுஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரமேஷ் பண்டிசித்தேகவுடா, எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார். எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள். மேலும், எம்.எல்.ஏ. ரமேஷ் பண்டிசித்தேகவுடா, எனக்கு பொன் செய்து அவதூறாக திட்டுகிறார். அவர் சொல்லும்படி நடக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடிப்பதாகவும் மிரட்டுகிறார்.
இதனால் எனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதன்காரணமாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்களிடம் இருந்து எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ரமேஷ் பண்டிசித்தேகவுடா, டெல்லி மேல்சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது