இளவரசன் நினைவு நாளையொட்டி நத்தம்காலனி- செல்லன்கொட்டாய் பகுதியில் போலீசார் குவிப்பு

தர்மபுரி,
தர்மபுரி அருகே நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நத்தம்காலனி, கொண்டம்பட்டி, நாயக்கன்கொட்டாய் கிராமங்களில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசன் தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவத்தாலும் இரு சமூகத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய சொந்த ஊரான நத்தம் காலனியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இளவரசனின் நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இளவரசனின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் நத்தம் காலனிக்கு செல்லாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மேற்பார்வையில், மதிகோன்பாளையம், செங்கள்மேடு, மாரவாடி, செல்லன்கொட்டாய், நத்தம்காலனி, கிருஷ்ணாபுரம் ஆகிய 6 இடங்களில் தாசில்தார்கள் தலைமையில் 4 போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story