தொழில் விருத்தி அடைவதற்காக இளம்பெண்ணின் இருதயத்தை கேட்ட 3 மந்திரவாதிகள் கைது
வியாபாரம் விருத்தியாக மளிகை கடைகாரரிடம் இளம்பெண்ணின் இருதயத்தை கெட்ட 3 மந்திரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
வசாய்,
வியாபாரம் விருத்தியாக மளிகை கடைகாரரிடம் இளம்பெண்ணின் இருதயத்தை கெட்ட 3 மந்திரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பரபரப்பு தகவல் வருமாறு:–
மளிகை கடைக்காரர்பால்கர் மாவட்டம் வான்காவ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது36). மளிகை கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு தேவ்நாத் (30), விஜய்நாத் (25), பிரபுநாத் (25) ஆகிய 3 மந்திரவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.
குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரை சேர்ந்த அவர்கள் வியாபாரத்தில் விருத்தி ஏற்படுத்துவதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறினர். இதற்காக சஞ்சயிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை வாங்கினார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவர்கள் சஞ்சயை அழைத்தனர். அதன்பேரில் அவர் 3 பேரையும் சந்தித்தார். அப்போது, பெரிய அளவில் பூஜை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு ரூ.5 லட்சம் மற்றும் இளம்பெண் ஒருவரின் இருதயம் தேவைப்படுகிறது.
3 பேர் கைதுஅதை வைத்து பூஜை செய்து மதிய உணவாக நாங்கள் அதை சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் தான் உனது வியாபாரம் செழிப்படையும். எனவே ஒரு இளம்பெண்ணின் இருதயத்தை எப்படியாது கொண்டு வர வேண்டும் என்று கேட்டு உள்ளனர்.
இதை கேட்டு சஞ்சய் பதறிப்போனார். உடனே அவர் வான்காவ் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். பின்னர் போலீசார் கொடுத்த யோசனையின்படி 3 பேரையும் தகானு பகுதியில் சாரோட்டி பகுதிக்கு வரும்படி அழைத்தார்.
இதை நம்பி மந்திரவாதிகள் 3 பேரும் வந்தனர். அப்போது போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.