குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கலசபாக்கம், செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்,
கலசபாக்கம், செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலசபாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் கலசபாக்கத்தில் இருந்து மேல்சோழங்குப்பம் செல்லும் மெயின் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து பாதிப்புஇதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார், கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டு அருகே உள்ள பானுநகர் பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதுகுறித்து புதுப்பாளையம் ஒன்றிய அலுவலகத்திலும், காரப்பட்டு ஊராட்சி நிர்வாகத்திடமும் புகார் மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செங்கம் – போளூர் சாலையில் திடீரென காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் புதுப்பாளையம் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.