காமராஜர் பிறந்தநாளில் ஏழை மாணவ– மாணவிகளுக்கு நோட்டு– புத்தகம் வழங்க தீர்மானம்


காமராஜர் பிறந்தநாளில் ஏழை மாணவ– மாணவிகளுக்கு நோட்டு– புத்தகம் வழங்க தீர்மானம்
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 10:18 PM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்தநாளில் ஏழை மாணவ– மாணவிகளுக்கு நோட்டு– புத்தகம் வழங்க தீர்மானம் ச.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகர ச.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் ரவிக்குமார், துணைச்செயலாளர்கள் கரீம், கால்டுவின், ஜெபசிங், மாநில பேச்சாளர் அமலன், வக்கீல் அணி செயலாளர் செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், வருகிற 14–ந் தேதி ச.ம.க. நிறுவன தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டும், 15–ந் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடும், புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், வடசேரி பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும் நடத்துவது, நாகர்கோவில் நகரின் 52 வார்டுகளிலும் ஏழை, எளிய மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குவது, 15–ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவிப்பது,  சரத்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு வார்டிலும் 50 மரக்கன்றுகள் நடுவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story