கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 6 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி,

அண்ணா தொழிற்சங்க ஓட்டுனர் உரிமையாளர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி லோடு ஆட்டோ, மினி லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுடன் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை பறித்து வைத்து 6 மாதம் தண்டனை வழங்குவதை கைவிட வேண்டும். லோடு ஆட்டோ, மினி லாரிகளில் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். வாகனங்களில் கட்டிட தொழிலாளர்களின் உபகரணங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும்போது, அதனை பாதுகாப்பதற்காக அதனுடன் சில தொழிலாளர்களையும் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story