நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குப்பைகளை அகற்றகோரி போராட்டம்
குளச்சலில் குப்பைகளை அகற்றகோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
குளச்சல்,
குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு சேரும் குப்பைகள் உப்பளம் பகுதியில் கொட்டப்பட்டு வந்தன. சுமார் 4 மாதங்களுக்கு முன்பு லியோன்நகர் பொதுமக்கள் உப்பளம் பகுதியில் குப்பையை கொட்டுவதால் பலவிதமான நோய்கள் பரவுகிறது என்று கூறி போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து உப்பளம் பகுதியில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது.
குளச்சலில் தேங்கும் குப்பைகள் ஆங்காங்கே மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மார்க்கெட்டின் பின்புறம் ஏராளமான குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மார்க்கெட் பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், ஜெய் விவேகானந்தா மக்கள் கலை மன்றத்தினர் நேற்று நகரசபை அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று நகரசபை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதைதொடர்ந்து கமிஷனர், மார்க்கெட் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் உடனடியாக குப்பை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story