வடசேரி கனகமூலம் சந்தையில் புதிதாக கட்டப்பட்ட 141 கடைகள் ஏலம் விடப்பட்டன

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் புதிதாக கட்டப்பட்ட 141 கடைகள் ஏலம் விடப்பட்டன. அப்போது நகராட்சி ஆணையரை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை உள்ளது. இங்கு புதிதாக 260 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளை குறைந்த டெபாசிட் மற்றும் வாடகைக்கு சந்தையில் உள்ள பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர். புதிய கடைகளை பழைய வியாபாரிகளுக்கே வழங்குவதாக முந்தைய நகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது. இதனாலேயே வியாபாரிகள் இத்தகைய கோரிக்கையை விடுத்தனர்.
ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் சரவணகுமார், ‘புதிய கடைகள் பொது ஏலம் விடப்படும். அதில் ரூ.1 லட்சம் டெபாசிட் செலுத்தி அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்குத்தான் கடை ஒதுக்கப்படும்’ என்று அறிவித்தார். இதனால் சந்தை வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். டெபாசிட் தொகை கட்ட இயலாத காரணத்தால் வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தீக்குளிக்கும் முயற்சியும் நடந்தது. எனினும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் வடசேரி கனகமூலம் சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் 158 கடைகளுக்கு நேற்று ஏலம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஏலத்துக்கு ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். பல அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் 141 கடைகள் ஏலம் போனது.
17 கடைகளுக்கு, ஒரு கடைக்கு 2 பேர் ஒரே தொகைக்கு ஒப்பந்த புள்ளி கொடுத்திருந்தனர். இதனால் அவர்களுக்கு மீதமுள்ள கடைகளில் விரும்பிய கடை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறியதாவது:–
வடசேரி கனகமூலம் சந்தையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் முதற்கட்டமாக 158 கடைகளுக்கு பொது ஏலம் நடந்துள்ளது. இதில் சந்தை பழைய வியாபாரிகளும் பங்கேற்றனர். மற்றவர்களும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு 141 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கடைக்கு டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சம் நகராட்சி நிர்வாகத்துக்கு கிடைத்தது.
மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையையும் முன்பணமாக செலுத்தியுள்ளனர். மீதம் உள்ள 102 கடைகளுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் ஏலம் நடக்கும். ஏலம் எடுத்து கடை நடத்துபவர்களுக்கு வங்கி மூலமாக சிறு வணிகக்கடன் பெற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஏலம் முடிவடைந்ததும் ஆணையர் சரவணகுமார் வெளியே புறப்பட்டார். காரில் ஏற வந்தபோது அவரை ஏராளமான வியாபாரிகள் முற்றுகையிட்டனர். புதிய கடைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் வைத்தவர்களுக்கும் கடை ஒதுக்கித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து வியாபாரிகளிடம் ஆணையர் சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Tags :
Next Story