பழனியில் நடந்த கலவரம் குறித்து முதல்–அமைச்சரிடம் புகார் செய்ய முடிவு அர்ஜூன் சம்பத் தகவல்


பழனியில் நடந்த கலவரம் குறித்து முதல்–அமைச்சரிடம் புகார் செய்ய முடிவு அர்ஜூன் சம்பத் தகவல்
x
தினத்தந்தி 6 July 2017 3:45 AM IST (Updated: 6 July 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் நடந்த கலவரம் குறித்து முதல்–அமைச்சரிடம் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

பழனி,

இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பழனி அருகே சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 7 கன்றுக்குட்டிகளை பிடித்து மடாதிபதி சம்பத்குமார ஜீயர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தது சரிதான். ஆனால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சியினர் உள்நோக்கத்தோடு ஜீயரை தாக்க முயற்சித்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த கலவரத்தில் இந்து அமைப்பினர் பலர் தாக்கப்பட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம். கலவரம் தொடர்பாக 16 பேர் மீது புகார் கொடுத்தோம். ஆனால் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய வேண்டும். பழனியில் நடந்த கலவரத்தை குறித்து தமிழக முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கடைகளை பிற மதத்தினருக்கு வாடகைக்கு விடுவதை கண்டிக்கிறேன். பழனியில் மதுபானம், இறைச்சி கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்து அமைப்பினர் வேறுபாடின்றி ஒற்றுமையாக நடத்த தீர்மானித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story