காஞ்சீபுரத்தில் விவசாயிகள் மனித சங்கிலி


காஞ்சீபுரத்தில் விவசாயிகள் மனித சங்கிலி
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 6 July 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

விவசாய மின் இணைப்பிற்கு கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உயிர்நீத்த விவசாயிகளின் நினைவு தினத்தையொட்டி மனித சங்கிலி நடந்தத.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய மின் இணைப்பிற்கு கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உயிர்நீத்த விவசாயிகளின் நினைவு தினத்தையொட்டி மனித சங்கிலி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் எழிலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நஷ்டமில்லா விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனித சங்கிலியில் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story