மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
இளம்பிள்ளை அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுர கிராமம் முனியம்பட்டி சன்னியாசி கடை பகுதியில் மதுக்கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதுக்கடை திறக்கப்படுவதாக கூறப்பட்ட கடைக்கு முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மதுக்கடைக்கு முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதையறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கோவில்களும் உள்ளன. இந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்கிறார்கள். கடை வந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதற்காக சாலை மறியல் போராட்டம் நடத்தி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். அதிகாரிகள் மதுக்கடையை திறக்க மாட்டோம் என கூறியும் இன்று (நேற்று) கடையை திறக்க விற்பனையாளர்கள் வந்திருக்கின்றனர். எங்கள் பகுதியில் எக்காரணம் கொண்டும் மதுக்கடையை திறக்கக்கூடாது என்றனர். இதைக்கேட்ட போலீசார், மதுக்கடை திறக்கவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story