பயணிகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; டிரைவர் லைசென்சு ரத்து


பயணிகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; டிரைவர் லைசென்சு ரத்து
x
தினத்தந்தி 6 July 2017 4:15 AM IST (Updated: 6 July 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே பயணிகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரின் லைசென்சையும் ரத்து செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போக்குவரத்து துணை ஆணையர் முத்துக்குமரன் ஆகியோர் உத்தரவின் பேரில் தஞ்சை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.

அதன்படி நேற்று வட்டாரபோக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிர்வேல் ஆகியோர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாப்பாநாடு, வடசேரி ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

லோடு ஆட்டோ பறிமுதல்

அப்போது அந்த வழியாக ஒரு லோடு ஆட்டோ வந்தது. அந்த லோடு ஆட்டோவை அதிகாரிகள் நிறுத்தினர். அப்போது அதில் 21 பயணிகள் இருந்தனர். சரக்கு ஏற்றும் லோடு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி வந்ததால் அந்தவாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரின் லைசென்சை 6 மாதம் ரத்து செய்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வரி கட்டாமல் இயக்கப்பட்ட 2 லோடு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த வாகனங்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தவிர உரிய போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கையும் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story