குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 July 2017 4:00 AM IST (Updated: 6 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் சரிவர நடைபெறவில்லை. இதை கண்டித்து, பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவ்வப்போது பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 10-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அலுவலகம் முன்பு அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10-வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்க வசதியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story