மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
குமாரபாளையம் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்,
குமாரபாளையம் அருகே குப்பாண்டாபாளையம் ஊராட்சி ஒட்டன்கோவில் பகுதியில் உள்ள சானாங்காட்டுப் பள்ளத்தில் தனியார் ஒருவரது நிலத்தில் மதுக்கடை கட்டப்பட்டு உள்ளது. அந்த நிலத்திற்கு செல்வதற்காக ஓடையின் குறுக்கே குறுகலான சிறுபாலமும் கட்டப்பட்டு உள்ளது.
இங்கு கட்டப்பட்டு வருவது மதுக்கடை என்பதை அறிந்து சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஒட்டன்கோவில், ஆலாங்காட்டுவலசு, கோயக் காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, தட்டாங்குட்டை, கல்லங்காட்டுவலசு போன்ற பகுதிகளைச்சார்ந்த 100 பெண்கள் உட்பட சுமார் 200 பேர் சானாங்காட்டுப்பள்ளம் பகுதிக்கு திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார், வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் குடிப்பவர்கள் பாட்டிலை நடுரோட்டில் போட்டு உடைத்து போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள். இங்கு திருமண மணடபம், பள்ளிக்கூடம் ஆகியவை அருகில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ள குறுகலான பாலம் நீர்வழி பாதையை அடைக்கும்’ என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்படும் என்றும், இங்கு மதுக்கடை அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தாசில்தார் ரகுநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தார். அதன்பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story