ரூ.6¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ‘ஜப்தி’ செய்யப்பட்டது


ரூ.6¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ‘ஜப்தி’ செய்யப்பட்டது
x
தினத்தந்தி 6 July 2017 4:15 AM IST (Updated: 6 July 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.6¾ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ‘ஜப்தி’ செய்யப்பட்டது.

திருச்சி,

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது23). திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த 2008–ம் ஆண்டு திருச்சி– சென்னை பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் துடி துடித்து இறந்தார். இதனையொட்டி கார்த்திகேயனின் பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் திருச்சி அரசு போக்குவரத்து கழகம் இறந்த கார்த்திகேயனின் பெற்றோருக்கு ரூ. 6 லட்சத்து 71 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதனை தொடர்ந்து நீதிபதி பால ராஜமாணிக்கம் ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்,, இந்த உத்தரவின்படி கோர்ட்டு அமீனா மற்றும் வழக்கறிஞர்கள் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு சென்று மதுரைக்கு புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு வந்தனர்.


Related Tags :
Next Story