நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்


நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 2:30 AM IST (Updated: 7 July 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பு வரவேற்று பேசினார். மத்திய செயற்குழு உறுப்பினர்கள் செல்வநாயகம், சண்முகம் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் முன்னிலையில் வருவாய்த்துறையினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட துணைதலைவர் ஆதிநாராயணன், இணை செயலாளர் முத்துலட்சுமி, பொருளாளர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு வட்ட கிளை தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைசிங், செயலாளர் அகஸ்டின், வருவாய் துறை அலுவலர் சங்க தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் ராமசாமி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நாங்குநேரி, அம்பை மற்றும் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்திலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் பணி செய்யாமல் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின.

Next Story