அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல்: நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல்: நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2017 4:15 AM IST (Updated: 7 July 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளரும், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவருமான பார்த்திபன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழரசன், மாவட்ட துணை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீது சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் 20 பெண்கள் உள்பட 65 பேர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார். 

Next Story