பரத்வாடா கிராமத்தை தனி பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி 3 பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராஜினாமா
பரத்வாடா கிராமத்தை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி 3 பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து மாவட்ட கலெக்டரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
உப்பள்ளி,
பரத்வாடா கிராமத்தை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி 3 பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து மாவட்ட கலெக்டரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
தனி கிராம பஞ்சாயத்துதார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவில் சாகளப்பி கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த கிராம பஞ்சாயத்திற்குள் பரத்வாடா கிராமம் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் சுமார் 1,000–க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் இதை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
மேலும் இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
ராஜினாமா கடிதம்எனவே தங்களது கிராமத்தை தனி பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி பரத்வாடா கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் சன்னபசவய்யா சோழிகல்மட், கமலவா மாடள்ளி, சன்னவா சம்சி ஆகிய 3 பேரும் தங்கள் பதிவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளி–தார்வார் மாவட்ட கலெக்டர் பொம்மனஹள்ளியை அவர்கள் சந்தித்து தங்களுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவர்களிடம் உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.