ஓடும் ரெயிலில் பெண் என்ஜினீயர் மானபங்கம் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர் கைது


ஓடும் ரெயிலில் பெண் என்ஜினீயர் மானபங்கம் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 July 2017 3:32 AM IST (Updated: 8 July 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பெண் என்ஜினீயரை மானபங்கம் செய்த வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ஓடும் ரெயிலில் பெண் என்ஜினீயரை மானபங்கம் செய்த வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெண் என்ஜினீயர்

பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவர் வேலை வி‌ஷயமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். பின்னர் அவர் மும்பை வழியாக பெங்களுரு திரும்புவதற்காக கடந்த 5–ந்தேதி அங்கிருந்து சி.எஸ்.டி. வரும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ரெயில் நாக்பூர்– புசாவல் இடையே நள்ளிரவு நேரத்தில் வந்து கொண்டிருந்த போது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயரின் உடலில் தொடக்கூடாத இடங்களை தொட்டு ஒரு கை வருடி கொண்டிருந்தது.

மானபங்கம்

இதனால் பெண் என்ஜினீயர் திடுக்கிட்டு கண்விழித்தார். அப்போது தனக்கு எதிரே உள்ள படுக்கையில் இருந்த வாலிபர் தன்னை மானபங்கம் செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த வாலிபரின் கையை தட்டிவிட்டு கடுமையாக திட்டினார்.

சத்தம்கேட்டு விழித்த சக பயணிகள் அந்த வாலிபரை பிடித்து தாக்கினர். இதுபற்றி பெண் என்ஜினீயர் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தார்.

பின்னர் நேற்றுமுன்தினம் ரெயில் சி.எஸ்.டி. வந்ததும் அவர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

டிக்கெட் பரிசோதகர் மற்றும் மற்ற பயணிகள் அந்த வாலிபரை பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், அவரது பெயர் முகமது ஆயுப் சுலைமான்(வயது23) என்பதும், வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story