வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு
வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்தார்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் மொட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது45). இவர் ஆலங்குடி மின்வாரிய கிளை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி சத்திரம் சித்தன்வாழூர் இணைப்பு சாலையில் மதுக்கடை அருகே டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மின்சாரம் தடை ஏற்பட்டதால் பன்னீர் செல்வம், டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பன்னீர் செல்வத்தை மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பன்னீர் செல்வத்துக்கு சரிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

Related Tags :
Next Story