சரக்கு, சேவை வரியிலிருந்து ஜவுளிக்கு விலக்க அளிக்க கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்


சரக்கு, சேவை வரியிலிருந்து ஜவுளிக்கு விலக்க அளிக்க கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 July 2017 4:30 AM IST (Updated: 9 July 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஜவுளிக்கு சரக்கு, சேவை வரியிலிருந்து விலக்க அளிக்க கோரி எடப்பாடியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

எடப்பாடி,

 எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஏறத்தாழ 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். ஏற்கனவே விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது காட்டன்நூல், ஜவுளிதுணிகளுக்கு 5 சதவீதவரியும், ஒப்பந்த பாவுகளுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறிதொழில் மேலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே சரக்கு, சேவை வரியில் இருந்து ஜவுளிக்கு விலக்கு அளிக்க கோரி எடப்பாடி வட்டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில் நேற்று விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு சங்க தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story