பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

ஆரல்வாய்மொழி அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. எலும்புகள் தடயவியல் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள வாரியூரை சேர்ந்தவர் வீரலட்சுமி (வயது 63). இவர் கடந்த மே மாதம் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் ஆரல்வாய்மொழி அருகே கண்ணுப்பொத்தை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வீரலட்சுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டபோது அழுகிய நிலையில் காணப்பட்டது. எனவே, அவர் வீரலட்சுமிதானா? அல்லது வேறு யாருமா? என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சட்ட சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க வீரலட்சுமியின் பிணத்தை தோண்டி எடுத்து ஆய்வு நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி ஆரல்வாய்மொழி அருகே தோவாளை பாலாஜி நகரில் புதைக்கப்பட்டிருந்த வீரலட்சுமியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், தாசில்தார் சாரதாமணி, துணை தாசில்தார் மரிய செல்வம் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் முன்னிலையில் தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பிணத்தை தோண்டி வெளியே எடுத்தனர்.
ஆசாரிபள்ளம் டாக்டர்கள் ராஜேஷ், பெஞ்சமின் ஆகியோர் வீரலட்சுமியின் உடலை பரிசோதனை செய்தனர்.பின்னர் எலும்பு கூடுகளை தடயவியல் சோதனைக்காக எடுத்து சென்றனர்.
இந்த எலும்புக்கூடுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் முடிவு வந்த பின்பு புதைக்கப்பட்டது வீரலட்சுமிதானா? அல்லது வேறு யாருமா? என்பது உறுதியாக தெரிந்து விடும் என போலீசார் தெரிவித்தனர்.
வீரலட்சுமியின் பிணம் தோண்டி எடுத்த போது அவரது மகன் சின்னத்துரையும், உறவினர்களும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Related Tags :
Next Story