கயத்தாறு அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்ற 3 பேர் கைது


கயத்தாறு அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2017 4:30 AM IST (Updated: 10 July 2017 3:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கயத்தாறு அருகே உள்ள தலைவாய்புரம் சர்வீஸ் ரோட்டில் பயணிகள் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் மறித்தனர். ஆட்டோவில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 32), ஜெயபாலன் (46) மற்றும் வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்த செல்லதுரை (33) என்பது தெரியவந்தது.


தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்வதற்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3பேரையும் கைது செய்தனர். ஆட்டோவில் 12 அட்டை பெட்டிகளில் இருந்த 576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story