உலக அமைதிக்கான 4½ ஆண்டு நடைபயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்த கர்நாடக சாமியார்
உலக அமைதிக்கான 4½ ஆண்டு நடைபயணத்தை கர்நாடக சாமியார் நேற்று காலை கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.
கன்னியாகுமரி,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சீதாராம் சுவாமி. இவர் உலக அமைதிக்காகவும், கிராமங்களின் முன்னேற்றதிற்காகவும் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9–ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்கினார்.
கடந்த 4½ ஆண்டுகளாக அவர் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுமார் 35 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் குமரி மாவட்டம் வந்தார்.
நேற்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அவர் தனது நடைபயணத்தை நிறைவு செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அதிகாலையிலேயே பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த சீதாராம் சுவாமி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் காவிக் கொடியை ஏந்தியபடி கோவிலின் உள்பிரகாரத்தை 108 முறை வலம் வந்தார்.
தொடர்ந்து முக்கடல் சங்கமத்துக்கு சென்று காவிக்கொடியை கீழே இறக்கி வைத்து தனது நடைபயணத்தை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன்பகவத் முன்னிலை வகித்து சீதாராம் சுவாமியை வாழ்த்தி பேசினார்.
இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஸ்ரீனிவாச கண்ணன், மாவட்ட பொறுப்பாளர் தாணுமாலயன், கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் முருகன், கோட்ட அமைப்பாளர்
பிரத்தோபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து
சீதாராம் சுவாமி மொட்டையடித்து கடலில் புனித நீராடினார்.
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அதிகாலையில் தனிபடகு மூலம் கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் அங்கு நடந்த குருபூர்ணிமா பூஜையில் பங்கேற்றார்.

Related Tags :
Next Story