குடிநீர் கேட்டு கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
குடிநீர் கேட்டு கிராம மக்கள் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் தாலுகா மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் மற்றும் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் கதிரவனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளோம். இது குறித்து நாங்கள் மல்லப்பாடி கிராம ஊராட்சி செயலர், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தாரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் குடிநீர் வழங்க கோரி வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரை எங்களுக்கு குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகிலேயே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயும், பர்கூர் பகுதிக்கு செல்லும் குழாய்களிலும் தினமும் குடிநீர் செல்கிறது. இதில் ஏதாவது ஒரு குடிநீர் இணைப்பை வழங்கினால் கூட, எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பஞ்சம் தீர்ந்துவிடும். எனவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story