ஜனாதிபதி தேர்தல்: புதுவை சட்டசபையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17–ந் தேதி நடைபெற உள்ளது.
புதுச்சேரி,
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் புதுவையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையொட்டி புதுவை சட்டசபையின் கமிட்டி அறையில் வாக்குச்சாவடி தயாராகி வருகிறது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு நடந்து வருகிறது. புதுவை சட்டசபையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் சட்டசபை கமிட்டி அறைக்கு சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருடன், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story