அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனர்.
இங்கு 132 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் 54 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை பணி புரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரியின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கவுரவ விரிவுரையாளர்கள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உயர்கல்வி துறை செயலர் அலுவலக கடிதத்தின்படி தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை சிறப்பு தேர்வின் மூலம் பணி நியமனம் செய்யும் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும், யு.ஜி.சி. விதிகளின்படி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் 46 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்தும், மண்டியிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story