வீட்டில் வெடிபொருட்கள் தயாரித்தவர் கைது மூட்டை மூட்டையாக பொருட்கள் பறிமுதல்
கண்ணமங்கலம் அருகே அனுமதியின்றி வீட்டில் வெடி பொருட்கள் தயாரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கொல்லமேடு ரகிமான்பேட்டை பகுதியில் வேலூர் மண்டல திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் உத்தரவின்பேரில் அந்த பிரிவின் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது மோகனம் என்பவரது மகன் செந்தில் (வயது 30) என்பவர் அவரது வீட்டில் அனுமதியின்றி வெடிபொருள் தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து செந்திலின் வீட்டிற்கு அவர்கள் சென்று சோதனையிட்டனர்.
அங்கு வெடிமருந்துகள் தயாரிப்பது தெரியவந்தது. இதற்கு பயன்படுத்த வைத்திருந்த 3 கிலோ மஞ்சள் கந்தகம், 2 கிலோ வெள்ளை கந்தகம், 6 கிலோ வெடிஉப்பு, 1 கிலோ பாலிஷ்பவுடர், 1 கிலோ சில்வர் மிக்சிங் பவுடர் மற்றும் இவற்றை வெடியாக தயாரிக்க வைத்திருந்த தகடினாலான 200 குப்பிகள் உள்பட 11 வகையான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் செந்திலை கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.

Related Tags :
Next Story