சம்பளம் வழங்கக்கோரி ‘டெல்’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்,
காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (டெல்) அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “நிலுவையில் உள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு கடன் மற்றும் சேமநலநிதி ஆகியவற்றை உடனடியாக செலுத்தவேண்டும், மாற்றுப்பணி கேட்டுள்ள தொழிலாளர்களுக்கு முறைப்படியான மாற்று வேலை வழங்க வேண்டும்’ என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க தலைவர் அர்ச்சுனன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story