மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி
தம்மம்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான்.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி அடுத்துள்ள நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யோகேஸ்வரன். இவருடைய மனைவி உஷாநந்தினி. இவர்களுக்கு காவியன் (வயது 7) கிதுசன் (5) மற்றும் 6 மாத ஆண் குழந்தை என 3 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் கிதுசன் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 2 நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். உடனே கிதுசனின் பெற்றோர் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவன் சிகிச்சை பெற்று குணம் அடைந்தான்.
அதன்பிறகு கடந்த வாரம் 7-ந் தேதி கிதுசன் மீண்டும் காய்ச்சலால் அவதிப்பட்டான். உடனே அவனை தம்மம்பட்டியில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அவனுக்கு நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலியுடன் காய்ச்சல் அதிகமானது. இதற்கு வயிற்று பகுதியை ஸ்கேன் எடுப்பதற்காக ஆத்தூருக்கு கிதுசனை பெற்றோர் அழைத்து வந்தனர்.
அப்போது வரும் வழியில் கிதுசனுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டதால், உடனே ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் கிதுசன் இறந்ததாக கூறினர். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த சிறுவனின் உடல் பிரேதபரிசோதனைக்காக அங்கேயே வைக்கப்பட்டது.
மர்ம காய்ச்சலால் கிதுசன் இறந்ததற்கு அவனுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் டாக்டர்களின் அலட்சியபோக்கு தான் காரணம் என்றும், அவர்களால் தான் தங்களது மகன் உயிர் போனது என கூறி பெற்றோர் கதறி அழுதனர்.
தம்மம்பட்டி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சிறுவன் கிதுசன் டெங்கு காய்ச்சலால் இறந்தான் என்ற தகவல், தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பரவியது.
இந்த தகவலை அறிந்த, சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் பேரில் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் வேலுமணி தலைமையில் நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் மருத்துவக்குழுவினர் வீடு,வீடாக சென்று காய்ச்சல் கண்டுபிடிப்பு மற்றும் கொசுஒழிப்பு சுகாதார பணி ஆகியவைகளை முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
அப்போது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் 2 பேருக்கு சாதாரண சளி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

Related Tags :
Next Story