கோவில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கோவில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

வாரியங்காவல்,

ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவு குறவன், குறத்தி ஆட்டம் கோவில் பூசாரி இளங்கோவன் (வயது 43) தலைமையில் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஜெயங்கொண்டம் காமராஜ புரத்தை சேர்ந்த ராகுல்தாஸ் (30) மற்றும் அவரது நண்பர்கள் யாரை கேட்டு இங்கு குறவன், குறத்தி ஆட்டம் நடத்துகிறாய் என்று கூறி இளங்கோவனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இளங்கோவன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story